Tuesday, September 16, 2008

ஓம் நமசிவாயா

நாம் எல்லோரும் உய்ய அம்மையும் அப்பனும் திருக்கயிலை மலையிலே யோகத்திலே அமர்ந்து புவனம் முழுவதையும் இயக்கிக்கொண்டிருக்கின்றனர். அவரது மந்திரமே திருவைந்தெழுத்தாகிய ஓம் நமசிவாய மந்திரம், இம்மந்திர உச்சாடனத்துடன் துவங்கும் இப்பாடல் அவனே எல்லாம் ஆனவர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

மூன்று காலங்கள் அவரது முக்கண்கள்.

நான்கு வேதங்களும் அவரது வழி

ஐந்து பூதங்களும் ஐயனின் முகங்கள்,

ஆறு காலங்கள் அவரது ஆடைகள்.

திருக்கயிலாய் மலையில் மலையரசன் பொற்பாவையை ஐயன் மணந்த போது எடுத்த எழு அடிகளும் ஏழு சுரங்கள்.

எட்டு திசைகளும் ஐயனின் பார்வை.

ஐயன் சொற்களே நவ ரசங்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருந்ஜோதியான திருக்கயிலை நாதரை கணபதி, முருகன்முதல், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பதெண்ணாயிரம் ரிஹிகளும், மற்றுமுள்ள எண்பத்து நாலு லெட்சம் ஜீவராசிகளும் அவரது திருவடிகளில் விழுந்து அவர் அருள் பாலிக்க வேண்டுகின்றது என்பதை அருமையாக சொல்லும் பாடல்.


பாடல் இடல் பெற்ற திரைப்படம் சலங்கை ஒலி , பாடலையும் கேட்டும், சைலஜாவின் நடனத்தையும் பார்த்து மகிழுங்கள் அன்பர்களே.


http://www.youtube.com/watch?v=0BXJmVSgfNsஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாயா

ஓம் நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகின்றேன் பூர்ணோதயா அருள் இல்லையா?

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா

பஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்
ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்

பஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்
ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்

மலை மகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் சுரங்கள் படிக்க

உன் பார்வையே எட்டு திசைகளே
உன் சொற்களே நவரசங்களே

கங்கையின் மணவாளா ஆ ஆ ஆ......

உன் மௌனமே...

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா


மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்

கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி தொழுதே துதிக்கும்

அத்வைதமும் நீ ஆதி அந்தம் நீ
நீ அங்கு இல்லை புவனம் முழுவதும்நீ

கயிலாய் மலை வாசா கலையாவும் நீ
புவிவாழ்வு பெறவே அருள் புரி நீ.

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா.

7 comments:

மதுரையம்பதி said...

இப்பாடலை இங்கு இனிதான் கேட்கணும் ஆனால் அதிக முறை கேட்டிருக்கிறேன். நல்ல பாடலை தந்தமைக்கு நன்றி கைலாஷி ஐயா.

Kailashi said...

பாடலை கேட்டு மகிழுங்கள் மதுரையம்பதி ஐயா.

கவிநயா said...

ஆஹா, நல்ல பாடல். மிக்க நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சலங்கை ஒலி-ல இந்தப் பாட்டுக்குக் கமல் அபிநயம் பிடிச்சிக் காட்டுவாரு! :)
நல்ல பாடல் கைலாஷி ஐயா!

//ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்//

ஈசனுக்கு புலித்தோல் ஆடை மட்டும் தானே?
அது எப்படி ஆறு காலங்களும் ஆடைகள் ஆகும்? கொஞ்சம் விளக்க வேண்டுகிறேன்!

குமரன் (Kumaran) said...

பல முறை கேட்ட பாடல் என்றாலும் நீங்கள் முன்னுரையாகச் சொல்லியிருக்கும் விளக்கத்துடன் படிக்க இன்னும் சுவையாக இருக்கிறது கைலாஷி ஐயா.

Kailashi said...

மிக்க நன்றி கவிநயா.

//ஈசனுக்கு புலித்தோல் ஆடை மட்டும் தானே?
அது எப்படி ஆறு காலங்களும் ஆடைகள் ஆகும்? கொஞ்சம் விளக்க வேண்டுகிறேன்!//

புலி அதல் ஆடையும், கரி உரி ஆடையும் கொண்டவன்தான் எம் ஐயன்.

இங்கே கவிஞரின் கற்பனை வளம் ஆறு காலங்களையும் ஐயனுக்கு ஆடைகள் ஆக்கி உள்ளது ( அதாவது எம்பெருமான் நிலையானவன் காலம் மாறி மாறி அவருக்கு ஆடைகள் ஆகின்றன என்று கொள்ளலாம்)

எப்படியோ சமாளித்து விட்டேன் பாடல் வரிகள் அடியேனுடையது இல்லை அல்ல்வா!!!


மிக்க நன்றி குமரன் ஐயா.

( எதிர்பாராத விதமாக நான் சென்ற இடத்தில் இருந்து பதிவிட இயலாமல் போனதால் தாமதாமாக பதில் அளித்திருக்கிறேன், பொறுத்துக் கொள்ளுங்கள்)

ஜுர்கேன் க்ருகேர் said...

ரொம்ப நன்றிங்க !