Thursday, September 11, 2008

சிவபெருமானின் ஆயிரம் திருப்பெயர்கள்


லலிதா சஹஸ்ரநாமத்தையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் படித்திருக்கிறேன்; மற்றவர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். சிவ சஹஸ்ரநாமத்தைப் படித்தது மட்டும் உண்டு. இன்று அந்த குறையும் தீர்ந்தது. சிவபெருமானுடைய ஆயிரம் திருப்பெயர்களைக் கூறும் 'சிவ சஹஸ்ரநாமத்தை' இன்று கேட்டேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

32 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமையான உச்சாடனம்! பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்! அப்படியே தோத்திரத்தின் வரிகளைக் கொடுங்களேன்...இல்லையானால் சுட்டி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சிவ சஹஸ்ரநாமம் எந்த நூலில் வருகிறது? இயற்றியவர் யார்? சஹஸ்ர நாமங்களைச் சொல்லும் மாய மோகனன் யார்?

ஜீவா (Jeeva Venkataraman) said...

வழங்கியமைக்கு நன்றிகள் குமரன். இங்கே சிவன் கோவிலில் அர்சனை செய்யும்போது கேட்டிருக்கிறேன்.

கவிநயா said...

நன்றி குமரா. இனிமேல்தான் கேட்கணும்.

மதுரையம்பதி said...

வழங்கியமைக்கு நன்றிகள் குமரன்.

Kailashi said...

திருக்கயிலை நாதன் தரிசனமும், அவரது ஆயிரம் போற்றியும் அருமை குமரன் ஐயா,

ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

கோவி.கண்ணன் said...

இந்த படத்தின் தவக்கோலம் எந்த இறைவனை நோக்கியது ?

வெறும் மூச்சு பயிற்ச்சி ? ஒரு நிலை தியானமா ?

RATHNESH said...

சிவ சிவா!

குமரன் (Kumaran) said...

எனக்கு நீங்கள் கேட்கும் விவரங்கள் எல்லாம் தெரியவில்லை இரவிசங்கர். இணையத்தில் தேடினால் பல தகவல்கள் கிடைக்கின்றன. சிவ சஹஸ்ரநாமம் பல புராணங்களிலும் மகாபாரதத்திலும் இருப்பதாகத் தெரிகிறது. இன்னும் தேடிப் பார்க்கிறேன். விவரங்கள் கிடைத்தால் தருகிறேன். சுட்டியுடன்.

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி ஜீவா. நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

தங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் கைலாஷி ஐயா.

குமரன் (Kumaran) said...

எனக்கு விடை தெரியாதே கோவி.கண்ணன். வெறும் மூச்சுப்பயிற்சியா, ஒரு நிலைத் தியானமா, ஏதாவது இறைவனை நோக்கிய தவக்கோலமா என்று அறிந்தவரே வந்து சொல்ல வேண்டும். இரவிசங்கர், கீதாம்மா, கைலாஷி ஐயா போன்றவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஹரஹரா.

நன்றி இரத்னேஷ்.

VSK said...

மிக நல்ல பதிவு குமரன்.

இந்த ஆயிரம் நாமங்களையும் விரைவில் பதிவிடுகிறேன்.

கீதா சாம்பசிவம் said...

எனக்கும் நண்பர் ஒருவர் மூலம் இதே வீடியோவும், சிவசஹஸ்ரநாமம் ஒலிநாடாவும் இணைந்த இந்த இணைப்பு வந்தது. மிக்க நன்றி குமரன்.

ஈசனின் தவக்கோலம் எந்த இறைவனையும் நோக்கி அல்ல. அவனே தவ வடிவானவனே! அவன் மோனத்தில் இருந்த ஒரு நிலை இது. அது இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றது. மூச்சு பயிற்சி என்பது என் போன்ற சாமானியர்களுக்கு மட்டுமே. அவனுக்கு இல்லை. ஒரு நிலை தியானமும் அவன் செய்வதில்லை. தியான வடிவே அவன் தான். இந்த தியான வடிவில் தட்சிணாமூர்த்தி சொரூபமாய் அவன் தென் திசை நோக்கி அமர்ந்திருப்பதைத் திருக்கைலையில் மிக மிக அற்புத தரிசனமாய்க் காண முடியும். இந்த பூமியை ஞானபூமி என்று அதனால் தான் சொல்கின்றார்களோ எனவும் நினைத்துக் கொள்வேன். நமக்கு உபதேசம் என்றும், எப்போதும், எந்நாளும் செய்து கொண்டிருக்கிறான். நமக்குத் தான் புரியலை! :(((((((((((

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி எஸ்.கே.

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி கீதாம்மா.

கோவி.கண்ணன் said...

//ஈசனின் தவக்கோலம் எந்த இறைவனையும் நோக்கி அல்ல.//

மூம்மூர்த்திகளில் ஒருவரான சங்கரனின் (படத்தில் இருப்பவர் அழிக்கும் கடவுள்) முழுமுதற் கடவுள் ஈசன் எனப்படும் சிவனை நோக்கிய தவம் என்று தான் ஒரு சிலர் சொல்கிறார்கள். இங்கே சங்கரனின் தவக்கோல நோக்கம் உலக அழிவை வேண்டிய நோக்கம் தான்.

கீதா சாம்பசிவம் said...

//மூம்மூர்த்திகளில் ஒருவரான சங்கரனின் (படத்தில் இருப்பவர் அழிக்கும் கடவுள்) முழுமுதற் கடவுள் ஈசன் எனப்படும் சிவனை நோக்கிய தவம் என்று தான் ஒரு சிலர் சொல்கிறார்கள். இங்கே சங்கரனின் தவக்கோல நோக்கம் உலக அழிவை வேண்டிய நோக்கம் தான்.//

தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அனைத்துமே தவறாகவே படும். ஆனால் தற்செயலாக நான் இந்தத் தவக்கோலத்தைப் பற்றியும், அதன் தாத்பரியம் பற்றியும், வேறு ஒரு இழைக்காக நான் எழுதும் சிவ வடிவங்கள் பற்றிய தேடலில் காணக் கிடைத்தது. இதுவும் ஈசனின் ஒரு வடிவமே, அதில் சந்தேகமே இல்லை. அன்னையைப் பிரிந்த ஈசன், மோனத் தவத்தில் ஆழ்ந்து போக உலக இயக்கம் நின்று விடுமோ, அன்னையை ஈசன் பிரிந்து யோகத்திலும், மோனத்திலும் ஆழ்ந்தால் சிருஷ்டிக்குப் பங்கம் நேரிடுமோ என அஞ்சியும், அதே சமயம் சூரபதுமனால் தேவர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த இடையூறுகளைக் களையவேண்டியும் ஈசனின் தவக்கோலத்தில் இருந்து அவனைக் கலைக்க எண்ணினார் பிரம்மா. ஆனால் அன்னை இல்லாமல் அவனின் தவம் கலைவது எங்ஙனம்?? அவன் அருகே நெருங்கும் துணிவு படைத்தவர் எவர்?? ஆகவே, யாகத்தீயில் விழுந்து உயிர்த்தியாகம் செய்த அன்னை இமவான் மகளாய் வளர்ந்து வருகின்றாள் என்பதறிந்து அவளை ஈசன் அடையவேண்டி, மன்மதனை ஏவுகின்றார் பிரம்மா. முதலில் பயந்து மறுத்த மன்மதனும் பின்னர் உலக க்ஷேமத்துக்கு வேண்டி ஒத்துக் கொண்டு ரதியுடன் வந்து ஈசனைத் தவத்தில் இருந்து எழுப்புகின்றான். தவம் கலைந்ததும் கண் திறந்த ஈசனின் நெற்றிக் கண்ணும் திறந்துகொள்ள, அதன் வெம்மை தாளாமல் மன்மதன் பொசுங்கிப் போக ரதி வாய்விட்டுக் கதறி அழுகின்றாள். நெற்றிக்கண்ணால் எரிந்து சாம்பலாய் ஆனவனை உயிர் பிழைக்க வைக்கமுடியாது என்றும், மன்மதனை உருவமற்றவனாய்த் தான் ஆக்குவதாயும், ரதியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் தெரிவான் என்றும் ஈசன் அருளுகின்றார். அன்று முதல் மன்மதன் "அநங்கன்" என்ற பெயரும் பெற்றுக் கொள்கின்றான். இந்த மன்மதனை எரித்தபின்னர் வருந்தும் கோலமே இந்தக் கோலம் என்றும், இந்த வடிவிற்கு "காம தகனர்" என்ற பெயர் உண்டு என்றும் தெரிந்து கொண்டேன். நீண்ட பதிலுக்கு நன்றி. கடவுளைப் பிடிக்கவில்லை என்றால் அவர் அழிப்பார் என்ற பொருள் கொள்ளக் கூடாது. ஆக்குவதும், அழிப்பதும் அவரே என்று நினைத்தாலே போதுமே! கடவுள் தண்டனை கொடுப்பார் என்று உங்களைப் பயமுறுத்தி வந்திருக்கின்றார்களோ சிறு வயதில் இருந்தே??? :)))))))))) எனினும் உங்களால், எனக்கு இந்த ஒரு விளக்கம் கிடைத்தது. நன்றி உங்களுக்கு.

கீதா சாம்பசிவம் said...

//நீண்ட பதிலுக்கு நன்றி. //

நீண்ட பதிலுக்கு மன்னிக்கவும் என்று வாசித்துக் கொள்ளவும். கவனக் குறைவு! :)))))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

காம தகனர் கோலத்துக்கும், அவனை எரித்த பின்னர் ஈசனார் மோனத்துக்கும் தந்த விளக்கங்களுக்கு நன்றி கீதாம்மா!

கோவி அண்ணா
உங்களுக்கு ஒரு சின்ன தகவல்.
தவம்-ன்னா அது எப்பமே ஒரு கடவுளை நோக்கித் தான் இருக்கணும்-ன்னும் இல்ல! மோனத் தவம், ஞானத் தவம் எல்லாம் ஒடுக்க நிலை! அவையும் தவம் தான்!

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல்
மற்றை யவர்கள் தவம்? என்பதும் குறள் அல்லவா!

சங்கரன் மும்மூர்த்திக்குள் அடக்கம், சதா சிவன் பரன்! அவன் இவனை நோக்கித் தவம் இருக்கிறான் என்பது சித்தாந்தக் கருத்து!
இன்னும் ருத்ரன், ஈசானன் என்று பல சிவ வடிவங்கள் உண்டு!

அவர்கள் எல்லாரும் தவம் செய்கிறார்கள் என்று பொதுவான உலக "தவக்" கண்ணோட்டத்தில்" இதைக் காண முடியாது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கோவி அண்ணா
படத்தைப் பாருங்கள்! "தவம்" செய்வபவர், கையை அருளும் நிலையில் வைத்துக் கொள்ள மாட்டார்! இங்கே ஈசன் அருளும் கோலம் வேறு!

கோவி.கண்ணன் said...

ஆயிரம் திருப்பெயர்களில் 'அல்லா', 'ஜஹோவா' இடம் பெறுமா ?

கோவி.கண்ணன் said...

//கடவுளைப் பிடிக்கவில்லை என்றால் அவர் அழிப்பார் என்ற பொருள் கொள்ளக் கூடாது. ஆக்குவதும், அழிப்பதும் அவரே என்று நினைத்தாலே போதுமே! கடவுள் தண்டனை கொடுப்பார் என்று உங்களைப் பயமுறுத்தி வந்திருக்கின்றார்களோ சிறு வயதில் இருந்தே??? :)))))))))) எனினும் உங்களால், எனக்கு இந்த ஒரு விளக்கம் கிடைத்தது. நன்றி உங்களுக்கு.//

கீதாம்மா,

நான் கடவுளைப் பிடிக்கவில்லை என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா ? நான் நாத்திக குடும்பத்தில் இருந்து வரவில்லை

முத்தொழிலில் ஒன்றான 'அழித்தல்' என்பதை ஆக்கல், காத்தல் போல் உங்களுக்கு ஏற்றுக் கொள்ள மனமில்லாததால், கடவுள் அழிப்பானா என்கிற வாதத்தையெல்லாம் வைக்கிறீர்கள்.

ஒவ்வொரு அழிவுதான் தோன்றுவதற்கான விதையே. இதுக்கு ஞான மெய்ஞான விளக்கம் தேவை இல்லை.

இங்கே இருப்பவரை சங்கரன், அவன் சிவனல்ல என்று எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றா ?

"தேவரும் மூவரும் காணாச் சிவபெருமான்" என்கிற பாடல் தான்,

இதே போன்று மற்ற சங்கரன் படத்திற்கு முன்னால் சிவலிங்கத்தைப் பார்த்து இருக்கிறேன். இங்கே இந்த படத்தில் இல்லை.

சிவபிரம்மா, சிவவிஷ்னு, சிவசங்கரன், மும்மூர்த்திகளுடன் சேர்த்து சிவனாகிய ஈஸ்வரனை மட்டும் தான் சொல்ல முடியும், மூம்மூர்த்திகளுக்கு தங்களுடன், தங்களுக்குள் (மும்மூர்த்திகளில் மற்றொருவரை) பிறரைச் சேர்த்து சொல்லும் இந்த சிறப்புக் கிடையாது, நீங்கள் வேண்டுமானால் சொல்லிப் பாருங்கள் பொருந்தி வராது, இராமனும்(கிருஷ்ணனும்)சிலலிங்கத்தை பூஜை செய்தி இருக்கிறான், பிரம்மனும் யோகம் செய்பவன் தான், அவனுது யோகமும் சிவனை நோக்கியதே.

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/brahma_QA97_l.jpg

இந்த படத்தைப் பார்த்துவிட்டு, விஷ்ணுவின் தொப்புளில் இருந்து தோன்றியதாக நம்பப்படும் பிரம்மா ? நாமம் போட்டுக் கொள்ளாமல், ஏன் சிவனுக்குறிய திருநீற்றை அணிந்திருக்கிறான், இதற்கு எனக்கு விளக்கம் சொல்லுங்கள். வரைபவர் தவறாக வரைந்துவிட்டாரோ ?

தத்துவ விளக்கங்கள், ஆன்மிகம் இவைகளெல்லாம் கதைகளைச் சொல்லப்பட்டுள்ளதால் மறை பொருள் என்றோ மறைந்துவிட்டது.

அதெல்லாம் சரியாக புரிந்திருந்தால் ஏன் மக்கள் தொகைக்கு ஈடாக தெருவுக்கு ஒரு அவதாரம் இருக்கப் போகிறது.

கீதா சாம்பசிவம் said...

//முத்தொழிலில் ஒன்றான 'அழித்தல்' என்பதை ஆக்கல், காத்தல் போல் உங்களுக்கு ஏற்றுக் கொள்ள மனமில்லாததால், கடவுள் அழிப்பானா என்கிற வாதத்தையெல்லாம் வைக்கிறீர்கள். //

:))))))))))))))) புரிதலில் வேறுபாடு இருக்கும்போது மேலே சொல்லுவதில் பயனில்லை, உங்களை நாத்திகவாதி எனச் சொல்லிவிட்டேன் என்ற அர்த்தம் வரும்படி எழுதி இருப்பதற்கு மிக மிக மன்னிக்கவும். அது என்னுடைய தவறான கண்ணோட்டமோ?? தெரியலை! என்றாலும் மீண்டும் மன்னிப்புக் கோருகின்றேன்.

கீதா சாம்பசிவம் said...

ஜெஹோவா, அல்லா எல்லாம் இந்தியாவுக்கு அப்புறம் அல்லவா வந்தன??? இதை இங்கே கேட்டிருக்கும் காரணம் எனக்குப் புரியலை!

கோவி.கண்ணன் said...

//கீதா சாம்பசிவம் said...
ஜெஹோவா, அல்லா எல்லாம் இந்தியாவுக்கு அப்புறம் அல்லவா வந்தன??? இதை இங்கே கேட்டிருக்கும் காரணம் எனக்குப் புரியலை!
//
கீதாம்மா,
எல்லாம் ஓர் இறைவன் தான் என்று சொல்லுவதற்கு மனம் ஒப்புமா என்று கேட்கவே கேட்டு இருந்தேன், வேறு ஒன்றும் சிறப்பு காரணம் இல்லை, 1001, 1002 ஆவது பேராக வைத்துக் கொள்கிறோம் என்றாவது சொல்லுவார்களா என்று எதிர்பார்த்தேன். தப்புதான்!
:)

கோவி.கண்ணன் said...

கீதாம்மா,

ஆக்கல், காத்தல், அழித்தல் இந்த வரிசையில் படைப்புகள் வராது,

ஆக்கல், அழித்தல், காத்தல். அதாவது பழையது அழியும் நிலைக்கு வரும்போது புதியதைப் படைத்தல், அதன்பிறகு பழையதை அழித்தல், பிறகுதான் படைத்தை காத்தல்.

எதாவது ஒரு தொழில் தான் ஒரு சமயத்தில் நடக்கும்.

பிரம்மா - சங்கரன் - கிருஷ்ணன் இதுதான் வரிசை.

ஜெகதீஸ்வரன். said...

கோவிகண்ணன் அவர்களே,

முதலில் எது படைத்தல்.

இரண்டாவது அழித்தல் என்றால் அங்கேயே எல்லாம் முடிந்து விடுகிறது. காத்தலுக்கு பலனோ, அவசியமோ இல்லை.!.

Ramanan Kannan said...

மகாபாரதத்தில் அநுசாசன பருவத்தில் வருகிறது.