Friday, May 22, 2009

எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே


எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
(எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படி பாடினரோ)






டி.எம்.எஸ். குரலில்

இயற்றியவர்: கவியோகி திரு. சுத்தானந்த பாரதியார்
வயலினில் இசைத்தவர்: குன்னக்குடி திரு. வைத்தியநாதன்
பாடியவர்: சிக்கில் திரு. குருசரண், டி.எம்.எஸ்.
இப்பாடலை தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. கிருஷ்ணமூர்த்தி

அனைவருக்கும் நன்றி.

நடராஜர் படத்திற்கு நன்றி: குந்தவை (மோகன் தாஸ்)

7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

என் தந்தை அடிக்கடிப் பாடும் பாடல். நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

பணியகத்தில நிறைய வேலை வந்திருச்சா மௌலி. இப்ப எல்லாம் உங்க பின்னூட்டத்தை எப்பவாச்சும் தான் பாக்க முடியுது?

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மௌலி.

S.Muruganandam said...

அடியேனுக்கு மிகவும் பிடித்த பாடல். பதிந்த தங்களுக்கும், தமிழ்த்தேனிக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவியோகியாரின் பாட்டும், நடராஜ சிற்பமும் அவ்வளவு அழகு!

//அருணகிரி நாதரும்//

அருணகிரி ஈசனை மட்டும் தனியாகப் பாடியுள்ளாரா குமரன்?
கவியோகி சொல்லியுள்ள மற்ற அத்தனை அடியவர்களும் ஈசனைத் தனிப்பாடல்கள் பலவற்றால் துதித்துள்ளனர்! அது போல அருணகிரியார் தனிப்பாடல்கள் செய்துள்ளாரா இல்லை திருப்புகழில் விரவி வருவது தானா?

குமரன் (Kumaran) said...

என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டாலே எனக்கு விடை தெரிவதில்லை. இதில இராகவப் பெருமாளிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் என்கிட்ட கேட்டா எப்படி? அருணகிரிநாதர் பாடல்களைப் பற்றி எனக்குத் தெரிஞ்சு மூனு பேருக்கு நல்லா தெரியும். 1. கிருபானந்தவாரியார் சுவாமிகள். அவர் அமரர் ஆயிட்டார். 2. இராகவன். 3. கேள்வி கேட்ட நீங்க. :-)

குமரன் (Kumaran) said...

டி.எம்.எஸ். குரலில் இந்தப் பாடலைக் கேட்டேன். அதனையும் இணைத்திருக்கிறேன்.