பன்னிரு சோதிலிங்கங்கள்:
1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்
2. ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர்
3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
4. மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
5. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்
6. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
7. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்
8. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
9. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
10. மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்
11. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
12. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச ச்ரிசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரம் அமலேஷ்வரம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
வாரணஸ்யாம் து விஸ்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே
ஏதானி ஜ்யோதிர் லிங்கானி சாயம் ப்ராத: படேந் நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச - சௌராஷ்ட்ர தேசத்தில் சோமநாதர்
ச்ரிசைலே மல்லிகார்ஜுனம் - ச்ரிசைலத்தில் மல்லிகார்ஜுனர்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் - உஜ்ஜயினியில் மஹாகாலர்
ஓம்காரம் அமலேஷ்வரம் - அமலேஷ்வரத்தில் ஓம்காரேஸ்வரர்
பரல்யாம் வைத்யநாதம் ச - பரலியில் வைத்யநாதர்
டாகின்யாம் பீமசங்கரம் - டாகினியில் பீமசங்கரர்
சேதுபந்தே து ராமேசம் - இராமேஸ்வரத்தில் இராமநாதர்
நாகேசம் தாருகாவனே - தாருகாவனத்தில் நாகேசர்
வாரணஸ்யாம் து விஸ்வேசம் - காசியில் விஸ்வேசர்
த்ரயம்பகம் கௌதமீ தடே - கௌதமி நதிக்கரையில் த்ரயம்பகேசர்
ஹிமாலயே து கேதாரம் - இமயமலையில் கேதாரேஸ்வரர்
குஸ்மேசம் ச சிவாலயே - சிவாலயத்தில் குஸ்மேசர்
ஏதானி ஜ்யோதிர் லிங்கானி - இவையே சோதி இலிங்கங்கள்
சாயம் ப்ராத: படேந் நர: - மாலையிலும் காலையிலும் படிக்கும் ஒருவரின்
சப்த ஜன்ம க்ருதம் பாபம் - ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள்
ஸ்மரனேன விநஷ்யதி - ஒரே நொடியில் அழிந்துவிடும்
9 comments:
த்வாதச ஜ்யோதிர் லிங்க ஸ்தோத்ரம் = ஆதி சங்கரர் அருளிச் செய்ததா குமரன்?
//மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்//
கிரிஷ்ணேஸ்வர் இல்லையா? குங்குமத்தை அழுத்தி (கிரிஷ்ணம்) உருவான சிவலிங்கம்!
ஒண்ணும் புரியல; ஆனா கேட்க வெகு இனிமையா இருந்தது :) நன்றி குமரா.
யார் அருளிச் செய்த துதி இது என்று தெரியவில்லை இரவி. ஆதிசங்கரராக இருக்கலாம்.
நன்றி குமரன்,
பாடலில் லிங்கங்கள் மாறியுள்ளன கவனித்தீர்களா?
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
இரவி,
குஸ்மேசரும் கிரிஸ்ணேஸ்வரும் ஒருவரே.
அக்கா,
பொருளும் எழுதிச் சேர்த்திருக்கேன். இப்படிப் படிச்சு/கேட்டுப் பார்த்தீங்கன்னா புரியும்.
அப்படியா கைலாஷி ஐயா. எனக்கு எந்த எந்த இலிங்கங்கள் எங்கே எங்கே இருக்கின்றன என்று தெரியாது. இந்தப் பாடலை இடும் போது இணையத்திலிருந்து தகவல்கள் எடுத்து எழுதியிருக்கிறேன்.
Kumaran avrgale Nageswar iruppathu Gujarath- Dwarakavuuku arugilll
நன்றி ஐயா.
Post a Comment