Wednesday, December 3, 2008

ஹரஹர ஜெகதீசா! அருள்புரி பரமேசா!

ஹரஹர ஜெகதீசா! அருள்புரி பரமேசா!
வரமருள் புரிவாயோ? திருவருள் புரிவாயோ?

(ஹரஹர)



சோதனை போதாதோ? வேதியர் மனம் இரங்காதோ?
நாதனே நான் என்ன செய்வேன்? நாற்பது வேலி நிலம்
உழுது நடவும் பொழுது இலையே
உனைத் தொழவும் சன்னிதி சேர்வது என்றோ?

(ஹரஹர)


படம்: நந்தனார்
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்
இசை: எம்.டி. பார்த்தசாரதி

13 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சோதனை போதாதோ?
வேதியர் மனம் இரங்காதோ?//

யாரை இவ்வரிகளால் குறிக்கிறார் குமரன்?

//நாற்பது வேலி நிலம்
உழுது நடவும் பொழுது இலையே/

யம்மாடியோவ்!
நாப்பது வேலி நிலத்தை உழணுமா?
ஒரு வேலின்னா கிட்டத்தட்ட ஆறே முக்கா ஏக்கர்!
270 ஏக்கரை ஒரே மனுசன் உழணுமா? அடக் கொடுமையே! ஈஸ்வரா! ஈஸ்வரா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இவ்வளவு உழைப்புக்கும் நடுவில், அக்காடா-ன்னு என்ஜாய் பண்ணாம, ஈசனை நினைத்து நந்தனார் அகம் உருகினார் என்றால்....
சும்மா அலுவலகத்திலும், வீட்டிலும், ரொம்ப வேலை-ன்னு ஜல்லி அடித்துக் கொண்டிருக்கும் அடியேன் எம்மாத்திரம்?

இவர் அளவுக்கு வேலை அதிகமில்லை என்றாலும்
ஈசனை, இவர் அளவுக்கு நினைக்க முடியுமா?

சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கு அடியேன்!
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்!

சிவ சிவ! திருச்சிற்றம்பலம்! ஹரி ஓம்!

குமரன் (Kumaran) said...

//யாரை இவ்வரிகளால் குறிக்கிறார் குமரன்?//

பாட்டு நல்லா இருக்குன்னு எடுத்துப் போட்டேன் இரவி. யாரைச் சொல்றார்ன்னு 'உங்களை' மாதிரியே எனக்கும் தெரியலை. ஒரு வேளை 'வேதியனை வேதத்து உட்பொருளை'ன்னு சொல்வாங்களே அவரைச் சொல்றாரோ?

நாற்பது வேலி நிலம்ன்னா 270 ஏக்கரா? அம்மாடியோவ். அம்புட்டு நிலம் ஒருத்தருக்கு உரிமையா இருந்தா அவர் குறுநில மன்னர் ஆயிடமாட்டாரு?

மெளலி (மதுரையம்பதி) said...

இப்போதான் முதல் முறையா இந்த பாடலைக் கேட்கிறேன் குமரன். நன்றி.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் இரவிசங்கர். நேரம் எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொள்வது தான். ஈடுபாடு இருந்தால் தானே நேரம் கிடைக்கும். எல்லாத்துக்கும். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. இன்னும் சில பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து கிடைத்திருக்கிறது. வரிசையாக வரும்.

S.Muruganandam said...

//சோதனை போதாதோ?
வேதியர் மனம் இரங்காதோ?//

நந்தனார் பணி செய்யும் நிலத்தின் உரிமையாளரைக் குறிக்கின்றது அக்காலத்தில் வேதியர்கள் நிலக்கிழார்களாகவும் இருந்திருக்கின்ரனர்.

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா. அது இரவிசங்கருக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். என் வாயைக் கிளற அவர் முயல்கிறார். அதனால் தான் அப்படி ஒரு பதில் சொன்னேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நன்றி கைலாஷி ஐயா. அது இரவிசங்கருக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். என் வாயைக் கிளற அவர் முயல்கிறார். அதனால் தான் அப்படி ஒரு பதில் சொன்னேன். :-)//

தவறான புரிதல் குமரன்! வாயைக் கிளறக் கேட்கவில்லை! அப்படின்னா சிரிப்பான் போட்டிருப்பேனே! :)

பாடலை இன்னொரு முறை படியுங்கள்,
வரமருள் புரிவாயோ?
திருவருள் புரிவாயோ?
சோதனை போதாதோ?
வேதியர் மனம் இரங்காதோ?
என்று வரிசையாக அவர் சொல்வதைப் பார்த்தால் இறைவனைத் தான் குறிப்பிடுகிறாரோ-ன்னு தோன்றியது! அதான் கேட்டேன்!

நாப்பது வேலி நிலம் அப்புறம் தான் பாடலில் வருகிறது!

குமரன் (Kumaran) said...

அப்ப சரி இரவி. தவறான புரிதல் என்றாலும் சரியான பதில் தான் தந்திருக்கிறேன் போல. இந்த வரிக்கு ரெண்டு பொருளையும் எடுத்துக்கலாம். :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே நல்ல் பதில் என்று உணரவைத்ததுக்கு நன்றி குமரன். பாடல் நல்ல பாடல் சிதம்பரம் போய் திரும்பாதவர்கள் மூன்று பேர்கள். நந்தனார்,மாணிக்கவாசகர், அப்பய்ய தீக்ஷதர். இவர்கள் இறைவனுடன் ஜோதிமயமாக கலந்தவர்கள்

குமரன் (Kumaran) said...

நன்றி தி.ரா.ச.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே நல்ல் பதில் என்று உணரவைத்ததுக்கு நன்றி குமரன்//

பதில் சொல்லாமல் இருப்பதே "நல்ல பதிலா" வேண்டுமானால் இருக்கலாம் திராச! ஆனால் அது "நல்ல போக்காக" அமையாது!

இங்கே கேட்டது ஆன்மீகக் கேள்வி! அதற்கு குமரன் பதில் சொல்லாமல் இல்லை! பதிலும் கொடுத்திருக்காரு! அந்தப் பதிலுக்கான விளக்கமும் அடியேன் கொடுத்திருக்கேன்!

//சிதம்பரம் போய் திரும்பாதவர்கள் மூன்று பேர்கள். நந்தனார்,மாணிக்கவாசகர்,அப்பய்ய தீக்ஷதர்//

அருமை!

//இவர்கள் இறைவனுடன் ஜோதிமயமாக கலந்தவர்கள்//

மாணிக்கவாசகர்,அப்பய்ய தீக்ஷதர் = ஜோதியில் கலந்தார்கள் தான்! ஆனால் "அக்னிப் ப்ரவேசம்" ஆகி, அப்புறமா ஜோதியில் கலந்தார்கள்? :)

நந்தனார் மட்டுமே "அக்னிப் ப்ரவேசம்" ஆகி, அப்புறமா ஜோதியில் கலந்தார்! :)