வருகலாமோ ஐயா - நான் அங்கே
உந்தன் அருகில் நின்று
கொண்டாடவும் பாடவும் (நான் அங்கே வருகலாமோ)
பரமக்ருபாநிதி அல்லவோ - இந்த
பறையன் உபசாரம் சொல்லவோ - உந்தன்
பரமானந்த தாண்டவம்
பார்க்கவே (நான் அங்கே வருகலாமோ)
பூமியில் புலையனாய் பிறந்தேனே - ஒரு
புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே - பவ
சாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா எந்தம்
பரிதாபமும் பாவமும் தீரவே (நான் அங்கே வருகலாமோ)
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதியார்
பாடியவர்: தண்டபாணி தேசிகர்
படம்: நந்தனார்
ராகம்: மாஞ்சி
தாளம்: மிஸ்ரதாபு
***
பாடல் வரிகளுக்கு நன்றி: தி.ரா.ச. ஐயா.
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அன்பின் குமரன்
நந்தனார் தில்லை சென்றது - அங்கு வெளியில் நின்று பாடியது - ம்ம்ம்ம்ம்
நல்ல பாடல் - பகிர்வினிற்கும் காணொளிக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நன்றி குமரன் ஐயா. நந்தனாரின் அருமையான ஒரு பாடல்.
பல முறை இந்த படத்தை பார்த்து மகிழ்ந்து இருக்கின்றேன். வருடந்தோறும்
திருப்புன்கூர் என்ற அந்த கோவிலுக்கு ஆரூத்ரா தரிசனம் போது என் தந்தையுடன்
அங்கு சென்றது நினைவுக்கு வருகிறது.
நன்றி
நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
இனியன் பாலாஜி
thanks for the informative and wonderful article keep up the good work
server kya hai
jquery kya hai
css selector kya hai
really nice article keep up the good work
new whatsaap privacy policy
what is nouns
nidhi bhanushali biography
rubina dilaik biography
Post a Comment