Tuesday, April 8, 2008

தில்லை ஈசனை நம்பிகெட்டவர் எவரைய்யா?

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்
நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.
ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு
பல்லவி
வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ

அனுபல்லவி
பரமகிருபாநிதி அல்லவோ----நீஇந்த நந்தன் உபசாரம் சொல்லவோஉந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)
சரணம்
பூமியில் புலையனாய் பிறந்தேனே--
நான்ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)
கண்களில் கண்ணீரை பெருகச்செய்யும் பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் உருகி உருகி பாடியிருப்பதை.
<"இங்கே கேட்கலாம் "><" ">

<" சுப்பைய்யா சார் நந்தனார் படத்தில் எம்.எம் தண்டபானி தேசிகர் பாடிய பாடல் உங்களுக்காக இங்கே இடுகிறேன்">

16 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் உந்தன் அருகில் நின்று//
//கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ//

ஹூம்...தில்லைக் காட்சிகள் கண் முன்னே வருகின்றன!
என்ன ஒரு ஏக்கம் நந்தனுக்கு!
அருகில் நிக்கனும், கொண்டாடணும், பாடணும்!

//கடந்தேனே கரை கடந்தேனே சரணம் அடைந்தேனே தில்லை வரதா//

இந்த "ஏனே, ஏனே" என்பதை மிகவும் நன்றாகப் பாடியுள்ளார்
நித்யஸ்ரீ

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் நான் போட்ட நிகழ்ச்சி நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்னால்.இப்பொதைய நிகழ்ச்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. கோபலகிருஷ்ணபாரதியாரின் பார்வையில் நந்தன்.

குமரன் (Kumaran) said...

பாட்டைப் படித்தேன் திராச. இனி மேல் தான் கேட்கவேண்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பாடல், முதல் முறை கேட்டேன். நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க குமரன் பயணத்தின் போதுதான் பிளாக் படிப்பீர்களோ. அப்பறம் வீட்டுக்கு போய் பாட்டு கேட்பீர்களோ. நல்ல முறைதான் நேரம் பொன் போன்றது

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by the author.
தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி இது போன்ற பல அற்புதமான பாடல்களை பாடி இயற்றியுள்ளார். சமயம் கிடக்கும்போது ஒவ்வென்றாக பாடலாம் என்று இருக்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

////தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்////

அருமை நண்பரே! அன்பரே!

நந்தனார் என்ற திரைப்ப்டம் 40களில் வந்ததாகச் சொல்வார்கள். அந்தப்படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றதா - அய்யா?

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் சுப்பைய்யா சார். நீங்கள் சொல்வது சரி. ஆனால் இரண்டு நந்தனார் படங்கள் வெளிவந்தன 1940 களில். ஒன்று மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் தணடபாணி தேசிகர் நடித்தது மற்றொன்று செருகளத்தூர் சாமா முசிரி சுப்ரமனிய்யரும் நடித்தது.பாட்டுக்களுக்காவே பலநாட்கள் ஓடியது. இசை பாபநாசம் சிவன்.

SP.VR. SUBBIAH said...

//////தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் சுப்பைய்யா சார். நீங்கள் சொல்வது சரி. ஆனால் இரண்டு நந்தனார் படங்கள் வெளிவந்தன 1940 களில். ஒன்று மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் தணடபாணி தேசிகர் நடித்தது மற்றொன்று செருகளத்தூர் சாமா முசிரி சுப்ரமனிய்யரும் நடித்தது.பாட்டுக்களுக்காவே பலநாட்கள் ஓடியது. இசை பாபநாசம் சிவன்.////

தகவலுக்கு நன்றி அய்யா!(சார்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்பாட‌ல் கேட்டு ம‌கிழ்ந்துள்ளேன்; அவ் இசைத்த‌ட்டில் உள்ள‌ அத்த‌னையும் கோபால‌ கிருஸ்ண‌ பார‌தியாரின் க‌னிவான‌ த‌மிழுக்கும்;நித்யஸ்ரீ
அவ‌ர்க‌ளின் உருக்க‌த்துக்கும் எத்த‌னை த‌ட‌வையும்
கேட்க‌லாம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க யோகன். கோபால கிருஷ்ண பாராதியாரின் பாடல்கள் உள்ளத்தை உருகவைக்கும்.பரமாசாரியர் ஒரு சமயம் கோபால கிருஷ்ணபாரதியாரின் சபாபதிக்கு வேறு தெய்வம் பாடலை மிகவும் விமரசனம் செய்து அதன் உட்பொருளை விவரித்தார்."ஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமா இல்லை போதுமே எது சரி என்பதை விளக்கினார். நான் செய்த பேறு அதைக்கேட்கும் வண்ணம் அமைந்தது.நன்றி யோகன்

jeevagv said...

மாஞ்சியில் அருமையான பாடல்!
எனக்குப் பிடித்த இடம்:
தில்லை வரதா பரி
தாபமும் பாவமும் தீரவே

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவாவின் வருகைக்கு நன்றி. மாஞ்சி ராகத்தின் ஸ்வரவெளிப்பாடு மிகுதியாக இருப்பது இங்கேதான் "தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)" இந்தப்பாடலுக்கு திருமதி பாலசரஸ்வதி தேவியவர்கள் நடனம் ஆடும்போது பார்க்கவேண்டும் . அந்த நந்தனாரின் பயத்தையும் மிரட்சியையும், ஆசையையும் அப்படியே கன்முன்னால் தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துவார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவாவின் வருகைக்கு நன்றி. மாஞ்சி ராகத்தின் ஸ்வரவெளிப்பாடு மிகுதியாக இருப்பது இங்கேதான் "தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)" இந்தப்பாடலுக்கு திருமதி பாலசரஸ்வதி தேவியவர்கள் நடனம் ஆடும்போது பார்க்கவேண்டும் . அந்த நந்தனாரின் பயத்தையும் மிரட்சியையும், ஆசையையும் அப்படியே கன்முன்னால் தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துவார்.

ஷைலஜா said...

அருமையான இந்தப்பாடலை வலைச்சரம் ஆன்மீகசரத்தில் இன்று சேர்க்கிறேன் திராச நன்றி