Thursday, May 8, 2008

காதலாகிக் கசிந்து




நமச்சிவாய வாழ்க.சிவனடியார்களில் சரித்திரத்தில் உள்ளத்தை உருகவைப்பவர் நந்தனார்.வாழ்க்கையில் எப்படியாவது ஒருதரம் சிதம்பரத்தில் நடமாடும் நடராஜனை கண்டுவிடவேண்டும் என்பதில் ஆழ்ந்த பற்றுள்ளவர்.பல்வேறு இடையூறுகளை தாண்டி சிதம்பரம் வந்து விடுகிறார். தூரத்தில் இருந்தபடியே தில்லைக்கூத்தனின் கோயிலின் கோபுரத்தை பார்த்து பரவசமாகி கண்டறியாதன கண்டேன் என்று மனதில் உவகை பொங்க மெய்சிலிர்த்து கணகளில் ஆனந்த வாரி சொறிய பாடுகிறார்.இதுதானோ தில்லைத் தானம் என்ற ஊர்.ஆஹா இத்தனை நாள் தெரியாமல் வழ்க்கையை வீணடித்து விட்டேனே. அந்தத்தெயவம் இந்தத்தெய்வம் என்று ஒரு நிலை கொள்ளாமல் அலையும் நேயனை இதோ பிடி உனக்கு கதிஎன்று கைகாட்டி அழைத்திடும் கருணாநிதி அவன்

இந்த உலகத்தில் கயிலை என்று சொன்னால் அது சிதம்பரம் என்று எல்லோரும் கூறுகிறார்கள் ஆனால் நான் இதுவரை அதை ஒருதடவை கூட சிறப்போடு பார்த்ததில்லை. அப்பேற்ப்பட்ட தில்லையா இது இங்கேயா என் ஈசன் இருக்கிறான் என்று பாடுகிறார்.திருமதிகள். ரஞ்சனி காயத்ரி குரலில் கேட்டு, பார்த்துதான் பாருங்களேன். குரலின் குழைவும் ராகங்களின் பங்கீடும் மிக நேர்த்தியாக உள்ளது

கோபலகிருஷ்ண பாரதியின் பாடல் இது. பக்தியும் பணிவும் தாபமும் வெளிப்படும் விதம் கேட்பவர் மனதை உருகவைக்கும். திருவாசகத்துக்கு உருகாதவர்கூட நந்தனின் பாட்டுக்கு உருகுவார்கள்

ராகம்;- ஷ்ண்முகப்பிரியாகாதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே

ஆடிய பாதனாய் நின்ற அம்பலத்தானை

நாடிய நேசற்கு நற்கதி நல்கியானை

கூடிய கரமும் நாவில் துதியுமாய்

தேடிய வந்தேன் புகல்


ராகம்:- பெஹாக் தாளம்:-ஆதி


பல்லவி

இதுதனோ தில்லைத்தலம்

இத்தனை நாளும் அறியேனே.....(இதுதானோ)

அனுபல்லவி

அதுவோ இதுவோ என்று அலைந்திடும் நேயனை

கதிதருவேன் என்று கைகாட்டி அழைத்திடும்...(இதுதானோ)

சரணம்

காசினியில் இதை கயிலை என்று எல்லோரும்

பேசக்கேட்டதே அன்றி பேணிப் பார்த்ததில்லை ....(இதுதானோ)








திருமதி. சௌமியாவின் குரலில் பாடலை இங்கே கேட்கலாம்<"click">

15 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காதலாகிக் கசிந்து கேட்டேன் திராச...
ரஞ்சனி & காயத்ரி மிக அழகாக ஷண்முகப்ரியாவை நிறுத்தி நிறுத்தி செதுக்கிச் செதுக்கி எடுக்கிறாங்க!

இது தானோ தில்லைத் தலம்? ரொம்ப நேரம் என் செவிகளில் ரீங்காரம் இடும்!

கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்கள் பல இந்த சிவன் பாட்டில் கொடுங்க!

அட, அடியேனே இன்னும் இங்கு கணக்கைத் துவங்கணும்!
ஆசார்ய ஹ்ருதயத்தில் துவங்கியாச்சு! இங்கே எங்கே என்று குமரன் கையில் பிரம்பை எடுக்கும் முன்னர் துவங்கி விடுகிறேன்! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

பாட்டு-படம் எல்லாம் சூப்பரு...

என்ன ஆனாலும் பெரியவங்க, பெரியவங்கதான்..... :-)

குமரன் (Kumaran) said...

மிக அருமையான பாடல் தி.ரா.ச. அறிமுகத்திற்கு நன்றி.

இரவிசங்கர். அவக்கரமே படாமல் மெதுவாக நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

Anonymous said...

இதிலேறி னோர்கைலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே.

கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து.

கேஆரெஸ் விராலிமலைக்குப்போன புண்ணியத்தால புஜங்கம் தமிழாக்கம் மறுபடியும் படிச்சேன். கந்தவரை சென்று கந்தனை தரிசிப்பது கயிலாயத்துக்கு செல்வதற்கு ஒப்பாகும்னு ஆதிசங்கரர் அவர் பாணியில இதுதானோ கயிலாயம்னு சொல்லியிருக்கார் பாருங்க. அதப்படிச்சுட்டு இங்க வந்தா கோபாலகிருஷ்ண பாரதியாரோட இதுதானொ தில்லைத்தலம் ஆனந்தக்கூத்தாடுது.
ஒண்ணு கவனிச்சீங்களா கோபாலகிருஷ்ண பாரதியார் பேர்ல கிருஷ்ணரை வைச்சுக்கிட்டு, சிவன் மேல அதீத காதல் கொண்டார். சுப்ரமணிய பாரதியாரோ கண்ணன் பாட்டா பாடினார். எப்படின்னாலும் நமக்கு கொண்டாட்டம்தான்

Anonymous said...

இதுதானொ தில்லைஸ்தலம், பேஹாக்ல நித்யஸ்ரீ பாடினது குறுந்தகட்டில என்னிடம்இருக்கு. ஷண்முகப்பிரியாலயும் அருமையா இருக்கு

Anonymous said...

ஷண்முகப்பிரியால காதலாகியும் நல்லாயிருக்குன்னு முந்தின பின்னூட்டம் இருந்திருக்கணும். பாட்டுல மயங்கிட்டனோ

jeevagv said...

திருவாசகத்திற்கும் உருகுவோம், நந்தன் பாட்டுக்கும் உருகுவோம்! :-)
அம்பலத்தான் எவ்வுருவில் வந்தாலும்,
வாராமல் போனாலும் உருகுவோம், மருகுவோம்.

விருத்தம் அழகா பாடல் அழகா என்றெல்லாம் போட்டியில்லையே ;-)

பாடல் வரியில் சிறு திருத்தம்:
//காசியினில் இதை கயிலை என்று எல்லோரும்//
காசினியில் இதை கயிலை என்று எல்லோரும்...
என்றிருக்க வேண்டுமல்லவா! - மேலே விளக்கத்தில் சரியாக இருக்கிறது:
//இந்த உலகத்தில் கயிலை என்று சொன்னால் அது சிதம்பரம்...//

ஜீவி said...

கோபால கிருஷ்ண பாரதி அவர்களின் உள்ளத்தை நெகிழச் செய்யும் வரிகளில்,
"கண்டறியாதன வற்றைக் கண்ணில் கண்டேன்" என்கிற உணர்வு எவ்வளவு அழகாக பதிந்திருக்கிறது, பாருங்கள்...

நெஞ்சைக் கட்டிப் போட்டு ஒன்றரக் கலக்கும் உணர்வை ஏற்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் சீக்கிரம் வந்து கணக்கை ஆரம்பிங்க. ஆடிட் பண்ணிதரவுதற்கு நான் இருக்கேன் பயம் வேண்டாம்.கோபலக்ரிஷ்ண பாரதியின் பாடல்களை இடுகிறேன். இது கலிகாலம் சிஷ்யன் சொன்னா குரு உடனே செய்துவிட வேண்டும்.

எப்படியிருந்தாலும் சிஷ்யன் குரு வீட்டிற்கு வருகிறாறோ இல்லையோ பதிவுக்குவாது வருவார் என்ற ஒரு அல்ப சபலம்தான்.

விருத்தமும் பாடலும் அருமையாக வந்தது சிவன் அருள்தான்

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க குமரன் வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் வாங்கினா மாதிரி இருக்கு. என்ன இருந்தாலும் நீங்க எனக்கு வலைப் பதிவு குரு இல்லையா?

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மௌலி. பாட்டு சூப்பர்ன்னா அதுக்கு அதுக்குக் காரணம் ரஞ்ஜனியும் காயத்ரியும், பாட்டு எழுதியது கோபாலக்ரிஷ்ண பாரத்ய். நம்ப வேலை காபி & பேஸ்ட்தான். அதற்கு நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க சின்ன அம்மிணி. முதல் வரவுக்கு நன்றி. 50 பதிவு போட்டு உத்ஸாகமாக வரீங்க.வாழ்த்துக்கள். எல்லோரையும் மயக்கும் பாட்டு உங்களையும் மயக்கியது வியப்பில்லை.இதிலேயும் தில்லை ஸ்தலம் பாட்டு பெஹாக்தான் விருத்தம்தான் ஷண்முகப்பிரியா. கொஞ்சம் மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத்தான் வேண்டும். மூன்று பின்னுட்டத்துக்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க ஜீவா. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன். நமக்கு இருக்கும் ஒரு பிணைப்பு சங்கிலி இசைதான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ஜீவி.முதல் வருகைக்கு வரவேற்பு. எனது மறைந்த பாலய ஸ்னேகிதன் முதல் வகுப்பு முதல் சிஏ வரை படித்த ஜீவியை ஞாபகப்படித்துவிட்டீர்கள்.


கோபாலக்ருஷ்ண பாரதியின் நந்தனார் பாடல்களெல்லாமே முத்துக்கள்தான். அந்த நேயத்தே நின்ற நிமலன் அருளோடு மற்ற பாடல்களையும் வழங்க எண்ணம் உண்டு. உங்களைப் போன்ற அடியவர்களின் ஆதரவுதான் வேண்டும்

MatureDurai said...

Ranjani and Gayathri in Isai Arangam-3
This video is unavailable
என்று உள்ளது.
இதனைப் பெற வேறு என்ன வழி ?அன்பர்கள் யாரேனும் வழி காட்டினால் மிகவும் நல்லது