Tuesday, March 4, 2008

தில்லை அம்பல நடராஜா!!!


முதன்முதலில் என் மனத்தில் தங்கிய இசைப்பாட்டு இது தான் என்று நினைக்கிறேன். சிறு வயதில் பற்பல நாட்கள் நாங்கள் (நானும் என் தம்பியும்) தூங்குவதற்காக எங்கள் தந்தையார் பாடிய பாடல் இது. எங்களுக்குத் தாலாட்டாக அமைந்தது. அந்தப் பழக்கம் தான் இன்று நான் என் மக்களுக்குத் தாலாட்டாக இறைப்பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறேன் போலும்.

என் தந்தையாரின் பெயர் நடராஜன். நாங்கள் மதுரைக்காரர்கள். அதனால் பல முறை ஏன் இந்தப் பாடல் என் தந்தையாருக்குப் பிடித்தது என்று சிந்திக்கும் போது ஒருவேளை 'நடராஜா' என்று வருவதால் இருக்குமோ, 'பாண்டிய ராணி நேசா' என்று வருவதால் இருக்குமோ என்றெல்லாம் எண்ணியதுண்டு. :-)

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!


தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா (தில்லை)



எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை)

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா (தில்லை)


இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
படம்: சௌபாக்கியவதி
இசை: பெண்ட்யால நாகேஸ்வரராவ்
வெளிவந்த வருடம்: 1957

16 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாடல் குறிப்பு கொடுங்க குமரன்!

//(நானும் என் தம்பியும்) தூங்குவதற்காக எங்கள் தந்தையார் பாடிய பாடல் இது.//

அன்பினால் பாடும் எப்பாட்டும் தாலாட்டு தான்!
இந் நன்னாளில் தந்தை நடராசரையும் சேர்த்தே வணங்கிக் கொள்கிறேன் குமரன்!

தில்லைக்கு மட்டுமா நடராஜா சொந்தம்? அங்கு பொன்னம்பலம்-னா நீங்க வெள்ளியம்பலம் ஆச்சே! மதுரை-ன்னா சும்மாவா? காலை வேற மாத்தி ஆட வச்சீங்க! :-)

G.Ragavan said...

ஆகா ஆகா

பாட்டுக்கோட்டையாம் பட்டுக்கோட்டையின் அருமையான கவிதை.

சௌபாக்யவதி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

ஏழிசை வேந்தரின் குரலும் அருமை. இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

வெற்றி said...

குமரன்,
அருமையான பாடலொன்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
இன்றும் கேட்கப் பிடிக்கும் பாடல், நான் இலங்கையில் வேலைசெய்த போது உடன் வேலைசெய்த அன்பர்
என்னைக் கண்டால் பாடும் பாடல்.
நம் பெயரிலும் இந்த நடராசா உள்ளதால்

அரை பிளேடு said...

கேட்டேன். மகிழ்ந்தேன். நன்றி

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலை இடும் போது பாடலைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை இரவிசங்கர். இராகவன் சொல்லியிருக்கிறார் பின்னூட்டத்தில். இணையத்திலும் தேடிப் பார்த்து இப்போது இட்டுவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

உங்களைப் போல் என்னைப் போல் எல்லோருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் இராகவன்.

குமரன் (Kumaran) said...

பாடல் பிடித்திருந்ததா? மிக்க மகிழ்ச்சி வெற்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் யோகன் ஐயா. உங்கள் பெயரிலும் நடராஜன் இருக்கிறார். பொருத்தமாகத் தான் பாடியிருக்கிறார் அந்த அன்பர். :-)

குமரன் (Kumaran) said...

கேட்டு மகிழ்ந்ததைச் சொன்னதற்கு நன்றி அரைபிளேடு.

cheena (சீனா) said...

குமர,

பாடல் அருமை. 1957ல் பாடியது - ம்ம்ம்

டிஎமெஸ்ஸின் குரல் - ஓஓ

தங்கள் தந்தையார் நடராசரெனில் தாங்கள் குமரர் தானே - பொருத்தமான பெயர்கள்.

மதுரை வெள்ளி அம்பலம் - சிதம்பரம் பொன்னம்பலம். என் பெயரும் சிதம்பரம் தான்.

சிறு வயதில் பாடிய நடராசா நடராசா நடன சுந்தர நடராசா எனும் பாடல் நினைவிற்கு வருகிறது.

பதிவிற்கு நன்றி குமர.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பாடல், வெகுநாள் கழித்துப் கேட்கத் தந்தமைக்கு நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

நல்ல இரசனை சிதம்பரம் ஐயா உங்களுக்கு. மிக்க நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி. நானும் வெகு நாட்கள் கழித்து தான் கேட்டேன்.

goma said...

தங்கள் பதிவு கண்டேன் .பக்தி மணம் கமழும் பக்கங்கள்...ஒவ்வொரு எழுத்தும் ஒரு அர்ச்சனை மலராக மலர்ந்திருப்பது போல் அமைந்திருக்கிறது

குமரன் (Kumaran) said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் கோம (தங்கள் முழுப்பெயரையும் சொல்லலாமா தெரியவில்லை). தொடர்ந்து வ்ருகைத் தாருங்கள்.