சொக்கேசர் மதுரையம்பதியில் நடத்திய திருவிளையாடல்களை கூறும் பாடல் அடியேனுக்கு மிகவும் பிடித்த பாடல். சக்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல பத்மினியின் நடனம் அருமை.
படம்: மதுரை வீரன்
பாடல் : கண்ணதாசன்
இசை: G.இராமநாதன்
ஆடல் காணீரோ!
விளையாடல் காணீரோ!
ஆடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ!
ஆடல் மதுரையின் ராஜ தம்பிரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ (ஆடல்)
ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று விணை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே
கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல் ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)
நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி
நாரைக்கு முத்தி கொடுத்து
உயர் நால்வேத பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து நக்கீரர்க்கு உபதேசித்து
வர குணப்பாண்டியர்க்கு சிவ லோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல்யாணைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரதன வளை விற்ற
திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!
ஆடல் மதுரையின் ராஜ கம்பீரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ .
6 comments:
நமசிவாய வாழ்க (சிவன் பாட்டு) பதிவிற்கு நல்வரவு கைலாஷி. மிக அருமையான பாடலுடன் வந்திருக்கிறீர்கள். முதன்மையான திருவிளையாடல்களை இந்தப் பாடல் சொல்கிறது.
பிட்டுக்கு மண் சுமந்த பகுதியை வரியில் சொல்ல மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே.
நன்றி குமரன் அவர்களே சரி செய்து விட்டேன்.
மிக அழகான இசைப் பாட்டுடன் வந்திருக்கீங்க கைலாஷி ஐயா!
நல்வரவு!
நாட்டியத்து இறைவனைப் பற்றிய பதிவில் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் பாட்டும் பரதமும் என்றும் இனியவை!
கைப்பிரம்பாலே பட்ட அடி என்னும் போதும்
வைர வளை முத்து வளை ரத்ன வளை விற்ற என்னும் போதும் - முகக் குறிப்பும் பாவங்களும் மிக நேர்த்தி!
ஐயன் ஆனந்த தாண்டவர்.
பத்மினி அம்மா நாட்டியப் போரொளி.
எனவே பாட்டும் பரதமும் நன்றாகத்தானே வரவேண்டும் KRS சார்.
ஊஞ்சல் ஆடும் சுவாமியின் படம் அருமை.
திருவிளையாடல் பாடல் அருமை.
ஆடல் பேரரசியின் நடனம் அருமை.
எந்தக் கோவில் தியாகராஜர் சார் சுவாமி.
சென்னை கோடம்பாக்கம் புலியூர் கோட்டத்து பரத்வாஜேஸ்வரர், தியாகராஜராக சேவை சாதித்து பொன்னுஞ்சல் ஆடுகின்றார்.
Post a Comment