இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே
படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்தலி கண் குளிர
தில்லையிலே (இடது)
திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என
திகுதிமிதகுதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையொடு (இடது)
பாடலை இங்கே கேட்கலாம்.
பாடியவர்: சுதா இரகுநாதன்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்தலி கண் குளிர
தில்லையிலே (இடது)
திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என
திகுதிமிதகுதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையொடு (இடது)
பாடலை இங்கே கேட்கலாம்.
பாடியவர்: சுதா இரகுநாதன்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
13 comments:
//படவரவு ஆட புலி அதள் ஆட//
விளக்கம் ப்ளீஸ்!
//திகுதிமிதகுதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே//
மாலவன் தாளத்துக்குத் தப்பாமல் மகேசன் ஆடும் காட்சியை நினைத்துப் பார்க்கவே இனிமையாக இருக்கு குமரன்!
@கேஆர்ஸ்
எனக்குத் தெரிந்த வரை
சிவபெருமானின் நடனத்தை பார்த்த மகிழ்ச்சியில் ஆதிசேஷன் தன் ஆயிரம் படம் ((தலைகளை) விரித்து ஆட,எப்பொழுதும் சிதம்பரத்தில் ஆனந்த நடசேனின் பக்கத்திலேயே நின்று கொண்டு இருக்கும் வியாக்ரபாத முனிவராகிய புலியின் கால்களையுடையே பதஞ்சலி மகிழ்ந்து
ஆட
இரவிசங்கர், நீங்க கேட்ட கேள்விக்கு தி.ரா.ச. சொன்ன விளக்கம் நல்லா இருக்கு. நான் இவ்வளவு விரிவா சிந்திக்கலை. சிவபெருமான் கழுத்தில் இருக்கும் படமெடுக்கும் அரவு ஆட, அவர் அணிந்திருக்கும் புலி ஆடை (அதள்) ஆட என்று தான் எண்ணியிருந்தேன்.
அதள் என்ற சொல்லுக்கு அகராதி தோல் என்று பொருள் சொல்கிறது. இது சும்மா தகவலுக்காக.
மாலவன் மத்தளம் கொட்ட பிரமன் தாளம் தட்ட நடராஜன் ஆடும் படத்தை மதுரையில் வெள்ளியம்பலத்திற்கு எதிரே இருக்கும் ஓவியங்கள் ஒன்றில் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் இரவிசங்கர். இணையத்தில் அந்தப் படம் கிடைக்கவில்லை.
மிக அற்புதமான விளக்கத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி தி.ரா.ச.
இணையத் தொடர்பு படுத்துகிறது.
இளங்காலை நேரத்திலே அருமையான பதிவினைப் படித்தேன். இனிமையான பாடலைக் கேட்டேன்.
உளம் மகிழ்ந்தேன்.
அழகான விளக்கங்களுடன் கூடிய வினாக்கள்.
பாபநாசம் சிவன் இல்லாத போது, உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் அனைத்துமே பொருத்தமாய்த்தான் இருக்கின்றண.
குமரன், கேயாரெஸ், திராச கூட்டணிக்கு நல் வாழ்த்துகள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி குமரன்.
நன்றிகள் சீனா ஐயா & மௌலி. மிக்க மகிழ்ச்சி.
அருமையான பாடல். லட்சுமி மதுர கீதம் இசைக்க. . அருமையான ஆனந்த நடனும் இன்றும் ஆடுகிறார் அய்யன் .
வியாக்ரதர் விருப்பம் நம் ஆனந்தம்
அருமையான பாடல். லட்சுமி மதுர கீதம் இசைக்க. . அருமையான ஆனந்த நடனும் இன்றும் ஆடுகிறார் அய்யன் .
வியாக்ரதர் விருப்பம் நம் ஆனந்தம்
அருமையான பாடல். லட்சுமி மதுர கீதம் இசைக்க. . அருமையான ஆனந்த நடனும் இன்றும் ஆடுகிறார் அய்யன் .
வியாக்ரதர் விருப்பம் நம் ஆனந்தம்
Post a Comment